தேவையானவை: சிறுகிழங்கு – கால் கிலோ.
அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் – 7 லிருந்து 8, சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் – 2.
பிசறுவதற்கு: பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
பொரிக்க: எண்ணெய் – ஒன்றரை கப்
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். சிறுகிழங்கை மண் போகக் கழுவி குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்து, தோலை உரித்து நான்காக நறுக்கவும். அரைத்த விழுதையும் அரிசி மாவு, உப்பையும் கிழங்கு துண்டுகளில் சேர்த்துப் பிசறவும். 10 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.
சேப்பங்கிழங்கு மசாலா தேவையானவை: சேப்பங்கிழங்கு – 15, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 10 பல், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், தூள் உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி வேகவைத்து தோலை நீக்கவும். பின் அதை சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாட்டில் மெல்லிய தகடுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்பவற்றைப் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த கிழங்குத் துண்டுகளையும் சேர்த்து நன்கு சுருள வேகவிட்டு எடுக்கவும்.