தேவையானவை:
- சிறு கிழங்கு கால் கிலோ,
- மிளகு பொடி 2 டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு தலா சிறிதளவு, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சின்னக் கிழங்காகப் பொறுக்கி, மண்போகக் கழுவி வேக விடவும். வெந்த கிழங்கைத் தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் தாளித்துப் போட்டுக் கிழங்கைச் சேர்த்து வதக்கவும். கிழங்கு வதங்கியதும் உப்பு, மிளகு பொடி சேர்த்துப் பிரட்டி, வதக்கி இறக்கவும். விரைவாகவும் எளிதாகவும் செய்யக்கூடிய பொரியல் இது. குறிப்பு: எந்தக் கிழங்கையுமே முதல்நாள் இரவே தண்ணீரில் போட்டு வைத்து, காலையில் கழுவினால் மண் சுத்தமாகப் போய்விடும். சீக்கிரமும் வேகும்.