தேவையானவை: கோதுமை மாவு & ஒரு கப், மைதா மாவு & ஒரு கப், நெய் & 1 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா & ஒரு சிட்டிகை, உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.
பூரணத்துக்கு: காய்கறி கலவை & கால் கப், பனீர் & 200 கிராம், பெரிய வெங்காயம் & 2, பச்சை மிளகாய் & 4, மல்லித்தழை & சிறிதளவு, மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது & அரை டீஸ்பூன், எண்ணெய் & 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பனீரை துருவுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின்னர் பனீர், மல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து பிசையுங்கள்.
சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள். பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.