தேவையானவை:
- சேப்பங்கிழங்கு கால் கிலோ,
- உப்பு தேவையான அளவு.
மசாலாவிற்கு:
- வரமிளகாய் 4,
- சின்ன வெங்காயம் ஏழெட்டு,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- புளி 1 சுளை.
தாளிக்க: எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்.
செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தோல் உரிக்க வருகிற அளவு வெந்தால் போதும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய கிழங்கை வதக்கவும். அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
குறிப்பு: எப்பொழுதுமே கிழங்கு வகைகளை தோல் உரிக்க வருகிற அளவிற்குத் தான் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்தால் பொரியல் கொழகொழவென்று மசியல் போல் ஆகிவிடும்.