தேவையானவை: சேப்பங்கிழங்கு – 5-லிருந்து 6, சின்ன வெங்காயம் – 10.
விழுதாக அரைப்பதற்கு: தேங்காய் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 7-லிருந்து 8, சீரகம் – அரை உப்பு – தேவைக்கேற்ப, ஊறவைத்த பச்சரிசி + கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன். டீஸ்பூன்,
தாளிக்க: எ ண்ணெய் – 5 டீஸ்பூன், மிளகு – 10, வெந்தயம் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, கெட்டி மோர் – ஒன்றரை கப் (தேவைப்பட்டால் மஞ்சள்தூள் 1 சிட்டிகை சேர்க்கலாம்)
செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நீளவாட்டில் நறுக்கவும். அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி கிழங்கையும் சேர்த்து கிளறவும். கடைந்த கெட்டி மோரில் உப்பையும் அரைத்த விழுதையும் கலந்து, வதக்கியதில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து நுரை கூடி வரும்போது இறக்கி விடவும். (மோர் குழம்பை கொதிக்க விடக்கூடாது).