...

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சேப்பங்கிழங்கு – 15, மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் – 2 கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் தோலை நீக்கி, நீளவாட்டில் நான்காக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இந்தக் கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக சேர்த்து அரைவேக்காடாக பொரித்தெடுக்கவும். பின் எண்ணெயை வடித்துவிட்டு, வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிதங்களைப் போட்டு தாளித்து வறுத்த கிழங்கு, தூள் உப்பு, மிளகாய்தூள், கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.