தேவையானவை:
சேமியா 1 கப்,
உருளைக்கிழங்கு 3,
பச்சை மிளகாய்,
இஞ்சி விழுது 1 டீஸ்பூன்,
மல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன்,
மாங்காய்தூள் 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு ருசிக்கு,
நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் 1 கப்,
எண்ணெய் வறுக்க.
செய்முறை: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசியுங்கள். அதில் சேமியா, அரைத்த விழுது, மல்லி, மாங்காய்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறிது சிறிதாக வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். பின்னர் அதனை நன்றாக நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.