...

சேமியா சீஸ் கிரிஸ்பீஸ்

தேவையானவை:

  • சேமியா  1 கப்,
  • பனீர்  200 கிராம்,
  • சீஸ்  3 கட்டி,
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  1 டேபிள்ஸ்பூன்,
  • மிளகுதூள்  1 டீஸ்பூன்,
  • பூண்டு  2 டீஸ்பூன்,
  • மைதா  அரை கப்,
  • கார்ன்ஃப்ளார்  கால் கப்,
  • பிரெட் தூள்  தேவையானது,
  • எண்ணெய்  வறுக்க,
  • உப்பு  தேவைக்கு.

செய்முறை:

சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்கு வேக விட்டு வடியுங்கள். சேமியாவுடன் துருவிய பனீர், சீஸ், பச்சை மிளகாய், மிளகுதூள், பூண்டு, உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையுங்கள். இந்தக் கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். மைதாவுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள். சேமியா கிரிஸ்பீஸை அதில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் வறுத்தெடுங்கள். சூடாக பரிமாறுங்கள். குழந்தைகளின் ஃபேவரிட் ஆகிவிடும் இந்த கிரிஸ்பீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.