சேமியா பிரதமன்

தேவையானவை:

  • சேமியா  1 கப்,
  • பாசிப்பருப்பு  அரை டீஸ்பூன்,
  • வெல்லம்  இரண்டரை கப்,
  • தேங்காய்ப் பால்  1 கப்,
  • ஏலக்காய்தூள்  1 டீஸ்பூன்,
  • நெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய தேங்காய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை சேருங்கள். 2 நிமிடம் பெரிய தீயில் வைத்து, பிறகு தீயைக் குறைத்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரையவிடுங்கள். கொதித்ததும் வடிகட்டி பாசிப்பருப்புடன் சேமியாவில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அத்துடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்தூள் சேருங்கள். நெய்யைக் காயவைத்து தேங்காயை சிவக்க வறுத்து சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *