தேவையானவை:
- சேமியா 2 கப்,
- பாசிப்பருப்பு அரை கப்,
- பெருங்காயம் அரை டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கு,
- கறிவேப்பிலை சிறிது,
- நெய் 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
- மிளகு 1 டீஸ்பூன்,
- சீரகம் 1 டீஸ்பூன்,
- இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்,
- முந்திரி (நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- நெய் 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: 1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்தெடுங்கள். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள். வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து நன்கு வேக விடுங்கள். அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.