தேவையானவை:
- புழுங்கலரிசி 1 கப்,
- காய்ந்த சோயா 2 டேபிள்ஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு தேவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு,
- சின்ன வெங்காயம் 8,
- பச்சை மிளகாய் 2.
செய்முறை: அரிசி, சோயா, உளுத்தம்பருப்பை கழுவி தனித்தனியாக 3 4 மணிநேரம் ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக ஆட்டி ஒன்று சேர்த்து உப்புக் கலக்கிவைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மாவு ஆட்டிவைத்த 10 மணி நேரம் கழித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கலந்து மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு, மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும்.