சௌசௌ பச்சடி

தேவையானவை:

  • சௌசௌ  கால் துண்டு,
  • பச்சை மிளகாய்  2,
  • சின்ன வெங்காயம்  ஐந்தாறு,
  • தேங்காய் துருவல்  2 டேபிள்ஸ்பூன்,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  2 சிட்டிகை,
  • உப்பு  திட்டமாக,
  • கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு,
  • மல்லித்தழை  சிறிதளவு,
  • தயிர்  ஒரு கப்,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சௌசௌவைத் தோல் சீவி, துருவி (அல்லது) பொடியாக நறுக்கவும். ஒரு ஆவியில் வேகவைத்து உப்புப் போட்டு இறக்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் காயுடன் சேர்க்கவும். தேங்காய் துருவலையும் பச்சை மிளகாயையும் அரைத்துக் கலக்கவும். கடைசியாக தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.