டாங்கர் பச்சடி

தேவையானவை:

  • கெட்டித் தயிர்  ஒரு கப்,
  • உளுத்தம்பருப்பை வறுத்து அரைத்த மாவு  2 டீஸ்பூன்,
  • கடுகு  கால் டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்  2,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  2 ஆர்க்கு,
  • மல்லித்தழை  கைப்பிடி அளவு,
  • உப்பு  திட்டமாக,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தயிரில் உப்பையும், உளுந்த மாவையும் கலக்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கித் தயிரில் கொட்டவும். சீரகத்தை உள்ளங்கையில் வைத்து நன்கு தேய்த்துப் போட்டு, நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். மணமாகவும் ருசியாகவும் இருக்கும் இந்தப் பச்சடி.