டிரை ஃப்ரூட் தோசை

தேவையானவை:

  • புழுங்கலரிசி   1 கப்,
  • உளுத்தம்பருப்பு   கால் கப்,
  • பெரிய கற்கண்டு (பொடித்தது)   10 டேபிள்ஸ்பூன்,
  • பேரீச்சம்பழம்   25,
  • உலர் திராட்சை   25,
  • டூட்டி ஃப்ரூட்டி   2 டேபிள்ஸ்பூன்,
  • தேன்   5 டீஸ்பூன்,
  • முந்திரிப்பருப்பு   30,
  • எண்ணெய்   தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும். ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும். மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும். பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும். அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

அனைவரின் நாவையும் கொள்ளைகொள்ளும் இந்த தோசை, பள்ளிக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்.