தக்காளி அரைத்த குழம்பு

தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 2, ஏலக்காய் – 2, எண்ணெய் – கால் கப். அரைக்க: தக்காளி – 4, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 3. தனியே அரைக்க: கசகசா – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்தெடுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, பூண்டு, வெங்காயத்தை சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். இது நன்கு வதங்கியதும் தக்காளி, மல்லித்தழை விழுது, சாம்பார் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இது பச்சை வாசனை போக கொதித்தபின் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *