தேவையானவை:
- வெங்காயம் 2,
- நன்கு பழுத்த தக்காளி 5,
- கறிவேப்பிலை சிறிது,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- பச்சை மிளகாய் 3,
- உப்பு தேவையான அளவு,
அரைத்துக்கொள்ள:
- கசகசா 3 டேபிள்ஸ்பூன்,
- சீரகம் ஒரு டீஸ்பூன்,
- தனியா 2 டீஸ்பூன்,
- பூண்டு 8 பல்,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் கால் கப், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, தேவையான உப்பு, சேர்த்து, நன்கு எண்ணெய் கசிந்து சுருள வதங்கும் வரை கிளறி, கடைசியாக அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இதை சாதத்தில் கலந்து சாப்பிட செம டேஸ்ட்!