தேவையானவை:
- பழுத்த தக்காளி 4,
- முந்திரிப்பருப்பு ஐந்தாறு,
- நெய் ஒரு தக்காளி விழுதைப் போல் ஒன்றரை மடங்கு,
- ஏலக்காய் 2 அல்லது 3.
- சர்க்கரை டீஸ்பூன்,
செய்முறை: தக்காளியை, அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி வேகவிடவும். வெந்து தக்காளி ஆறியதும் தோலை எடுத்து விட்டுப் பிசையவும். சக்கை இருந்தால் எடுத்து விடவும். தக்காளி விழுதுடன் சர்க்கரை சேர்த்துப் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். இறக்கும் முன் முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயை தூள் செய்து கலக்கவும்.
குறிப்பு: கொஞ்சம் தேனும், ஒரு சிட்டிகை குங்குமப் பூவும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.