தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி 4, சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 10 பல், புளி ஒரு எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், பச்சைமிளகாய் 2, உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். இதில் தக்காளி, மிளகாய்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயம் தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்குங்கள்.