தேவையானவை:
சேமியா & 1 கப், பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 4, பச்சை மிளகாய் & 4, மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது & 1 டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை & சிறிது, உப்பு & ருசிக்கு.
தாளிக்க: கடுகு & 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & 1 டீஸ்பூன், பட்டை & 1 துண்டு, சோம்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விட்டு வடியுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் தக்காளி, இஞ்சி & பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்குங்கள். அதில் சேமியா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.