தேவையானவை:
- நன்கு பழுத்த கெட்டியான தக்காளி 2,
- தேங்காய் துருவல் அரை கப்.
- புளிக்காத தயிர் ஒரு கப்,
- பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 2,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
விருப்பப்பட்டால் தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன்,எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய தக்காளி, மல்லித்தழை, பச்சைமிளகாய், தேங்காய் துருவலை தயிரில் கலந்து கொள்ளுங்கள். கடுகு தாளித்து கொட்டுங்கள். இதில் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். பிரியாணிக்கும், சப்பாத்திக்கும் ருசிகூட்டும் கலர்ஃபுல் பச்சடி.