...

தக்காளி தோசை

தேவையானவை:

  • பச்சரிசி   ஒரு கப்,
  • புழுங்கல் அரிசி   ஒரு கப்,
  • வெந்தயம்   2 டீஸ்பூன்,
  • தக்காளி   கால் கிலோ,
  • காய்ந்த மிளகாய்   10,
  • தேங்காய் துருவல்   அரை கப்,
  • உப்பு   தேவையான அளவு,
  • எண்ணெய்   தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் மூன்றையும் ஊற வையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து 4 லிருந்து 5 மணி நேரம் புளிக்க விடுங்கள். பிறகு தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கலந்து தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மெல்லிய தோசையாக இடுங்கள். மொறுமொறு தக்காளி தோசை ரெடி. குறிப்பு: விருப்பப்பட்டால், வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.