தேவையானவை:
- நன்கு பழுத்த தக்காளி ஒரு கிலோ,
- புளி நெல்லிக்காய் அளவு,
- காய்ந்த மிளகாய் 15,
- வறுத்து அரைத்த வெந்தயம்,
- பெருங்காயதூள் ஒரு டீஸ்பூன்,
- பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கியது),
- பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டேபிள்ஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கால் கப்,
- எண்ணெய் அரை கப்,
- கடுகு ஒரு டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியுடன் புளி, மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்குங்கள். அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் கசிந்து வரும்வரை வதக்குங்கள். கடைசியில் வெந்தயப்பொடி, பெருங்காயத்தூளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கியதும், ஆற வைத்து டப்பாவில் நிரப்புங்கள்.
குறிப்பு: 15 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.