‘தளவாய்’ பழப் பச்சடி

தேவையானவை:

  • ஆப்பிள்   பாதி,
  • ஆரஞ்சு   பாதி,
  • புளிக்காத கருப்பு திராட்சை   50,
  • வாழைப்பழம்   1,
  • தக்காளிப் பழம்   2,
  • மாம்பழம்   கால் பகுதி,
  • தயிர்   இரண்டரை கப்,
  • சர்க்கரை   தேவைக்கேற்ப (சுமார் முக்கால் கப் தேவைப்படும். பழங்களின் புளிப்பைப் பொறுத்து, அளவை அதிகரிக்கலாம்),
  • ஏலத்தூள்   2 சிட்டிகை.

செய்முறை: எல்லாப் பழங்களையும் கழுவிக்கொள்ளவும். மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிளைத் தோல் நீக்கித் துண்டுகளாக்கவும். ஆரஞ்சு, திராட்சையில் விதைகளை நீக்கவும். வாழைப்பழத்தின் தோலை உரித்து வில்லைகளாகவும் தக்காளியைத் துண்டுகளாகவும் நறுக்கவும். நறுக்கிய பழங்களுடன் சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து, பரிமாறும் முன் தயிர் கலக்கவும்.

குறிப்பிட்ட ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கின்ற இந்தப் பச்சடி, தளவாய் ஸ்பெஷல் அயிட்டங்களில் ஒன்று. விருந்துகளில் உங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தரும். சாதாரண நாட்களில் கூட வீட்டில் இருக்கின்ற வாழைப்பழம், தக்காளி போன்ற ஒன்றிரண்டு பழங்களை வைத்து இதைச் செய்யலாம்.