தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 2, சர்க்கரை – கால் கப், முந்திரிப்பருப்பு – 10, உலர் திராட்சை – 10, வேர்க்கடலை – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒன்றரை கப்.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி கழுவிக் கொள்ளவும். பின் ஸ்கிராப்பரில் கிழங்கை பொடியாக துருவிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை 2 துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கவும். வாணலியில் எண்ணெயை சுடவைத்து, காய்ந்த திராட்சை, முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை அதில் சிவக்க வறுத்தெடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் துருவிய கிழங்கையும் சிறிது சிறிதாக வெள்ளை நிறமாக மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும். வறுத்தெடுத்த கிழங்கு ஆறியதும் சர்க்கரை, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, கடலை ஆகியவற்றை கலந்து குலுக்கி எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும். தில்குஷ் மிக்சர் ரெடி. குழந்தைகளின் மனதைக் கொள்ளைகொள்ளும் மாலை நேர ஸ்நாக்ஸ் இது.