தேவையானவை:
- மைதா ஒரு கப், உப்பு தேவையான அளவு,
- நெய் அல்லது எண்ணெய் சுட்டெடுக்கத் தேவையான அளவு.
பூரணத்துக்கு:
- துவரம்பருப்பு அரை கப்,
- சர்க்கரை அரை கப்,
- ஏலக்காய்தூள் அரை தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சற்று இளக்கமாகப் பிசைந்துகொள்ளுங்கள். அதன் மேலே சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து, 2 மணி நேர ஊறவிடுங்கள். இதுதான் போளிக்கான மேல்மாவு.
துவரம்பருப்பை நெத்துப் பருப்பாக, குழையாமல் வேகவைத்து, தண்ணீரை வடியுங்கள். சர்க்கரை, தேங்காய் துருவல், வேகவைத்த பருப்பு.. மூன்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சர்க்கரை இளகி, மீண்டும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். இப்போது பூரணம் ரெடி.
அடுத்து, மைதாவை சிறிய அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல செய்து, உள்ளே பருப்பு பூரணத்தை வைத்து மூடி, மெல்லிய போளியாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.