தேவையானவை:
- பச்சரிசி 1 கப்,
- உளுத்தம்பருப்பு கால் கப்புக்கு சற்று குறைய,
- தேங்காய் (துருவியது) கால் மூடி,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி வைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.
இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய் 8, பூண்டு 2 பல், புளி 3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.