நூடுல்ஸ் பாயசம்

தேவையானவை:

  • அரிசிமாவு  2 கப்,
  • பால்  இரண்டரை கப்,
  • கண்டென்ஸ்டு மில்க்  அரை கப்,
  • சர்க்கரை  2 கப்,
  • முந்திரிப்பருப்பு,
  • கிஸ்மிஸ்,
  • நெய்,
  • ஏலக்காய்தூள்,
  • குங்குமப்பூ  சிறிதளவு.

செய்முறை: அரிசிமாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஓமப்பொடி அச்சில் வைத்து, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, கொதிக்கும் தண்ணீரில் பிழிந்துவிடுங்கள். அது வெந்தவுடன் மேலே மிதந்து வரும். பிறகு அடுத்த ஈடு பிழியுங்கள். இப்படியே எல்லா மாவையும் பிழிந்த பின் பாலையும், கண்டென்ஸ்டு மில்க்கையும் போட்டு கொதி வந்தவுடன் சர்க்கரையையும் போட்டு இறக்கவும். பிறகு பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூவையும் போட்டுக் கலந்து பரிமாறுங்கள். இப்போதெல்லாம் நூடுல்ஸ் விரும்பாத குழந்தைகளே கிடையாது. குழந்தைகளுக்கு இது ஒரு வித்தியாசமான பாயசமாக இருக்கும்.