தேவையானவை:
- பனீர் 200 கிராம்,
- கடலை மாவு 1 கப்,
- மிளகாய்தூள் 1 சுவைக்கேற்ப,
- ஆப்ப சோடா ஒரு சிட்டிகை,
- எண்ணெய் தேவையான அளவு.
பொடிக்க: சீரகம் அரை டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், கருப்பு உப்பு கால் டீஸ்பூன், உப்பு டீஸ்பூன்.
செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காயவைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.