...

பனீர் பாயசம்

தேவையானவை:

  • பனீர்  200 கிராம்,
  • பால்  ஒரு லிட்டர்,
  • கண்டென்ஸ்டு மில்க்  3
  • டேபிள்ஸ்பூன்,
  • சர்க்கரை  முக்கால் கப்,
  • சீவிய பாதாம்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன்,
  • நெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பனீரை துருவிக்கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சி, அதனுடன் சர்க்கரை, பனீர் துருவல் சேருங்கள். தீயைக் குறைத்துவைத்து, பாத்திரத்தில் இருக்கும் பால், முக்கால் பாகமாக (உதாரணமாக, 4 கப் அளவு என்றால் அது 3 கப்) ஆகும் வரை நன்கு கொதிக்கவிடுங்கள். அவ்வப்போது கிளறிவிடுங்கள். முக்கால் பாகமாக வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, கைவிடாமல் கிளறுங்கள் (இல்லையெனில், அடிப்பிடித்து, தீய்ந்துவிடும்). மேலும் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சீவிய பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு இறக்குங்கள். சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.