தேவையானவை:
- துவரம்பருப்பு கால் கப்,
- கடலைப்பருப்பு முக்கால் கப்,
- பாசிப்பருப்பு கால் கப்,
- பச்சரிசி கால் கப்,
- சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) அரை கப்,
- பச்சை மிளகாய் 3,
- இஞ்சி ஒரு துண்டு,
- தேங்காய் துருவல் அரை கப்,
- மல்லித் தழை ஒரு கைப்பிடி,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எலுமிச்சம்பழச் சாறு ஒன்றரை முதல் 2 டேபிள்ஸ்பூன்,
- சோம்பு ஒரு டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள். காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.
குறிப்பு: ஐந்து காய்ந்த மிளகாய், சிறிது உப்பு, இரண்டு பல் பூண்டு.. இவற்றை அம்மியில் வைத்துக் கரகரப்பாக அரைத்த சட்னி, இந்தப் பருப்பு உருண்டைக்கு பிரமாதமான காம்பினேஷன்.