தேவையானவை:
- சேமியா 1 கப்,
- துவரம்பருப்பு முக்கால் கப்,
- தக்காளி 3,
- தேங்காய் துருவல் கால் கப்,
- உப்பு ருசிக்கு,
- கறிவேப்பிலை,
- மல்லிதழை சிறிதளவு,
- எலுமிச்சம்பழச் சாறு ஒன்றரை டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் சிறிது.
தாளிக்க:
- கடுகு 1 டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 3,
- பெருங்காயம் கால் டீஸ்பூன்,
- எண்ணெய் 1 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக வைத்து வடியுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.