தேவையானவை:
- துவரம்பருப்பு அரை கப்,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- சோம்பு கால் டீஸ்பூன்,
- பூண்டு 2 பல்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் கால் கப்,
- வெந்தயம் கால் டீஸ்பூன்,
- சீரகம் கால் டீஸ்பூன்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு திட்டமாக,
- நறுக்கிய மல்லித்தழை,
- கறிவேப்பிலை தலா சிறிதளவு,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- பச்சை மிளகாய் 1 (வாசனைக்கு).
செய்முறை: துவரம்பருப்பை ஊறவைத்து மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும்.(குக்கரில் வைத்தால் குழைந்துவிடும்). தேங்காயை அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளவும். பருப்பு முக்கால் வேக்காடானதும் உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், சோம்பு, பூண்டு சேர்த்துக் கொதிக்க விடவும். (சோம்பு பச்சையாகப் போடாமல், வெறும் வாணலியில் வறுத்தும் போடலாம்). பச்சடி கொதித்து உப்பு, உறைப்பு சேர்ந்ததும் அரைத்த தேங்காய், சீரகம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கியதும், நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். ‘
குறிப்பு: இந்தப் பச்சடிக்குப் புளி சேர்ப்பதில்லை. பிரியப்பட்டால் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். எப்பொழுதும் பருப்பு வகைகளை ஊறவைத்து சமைத்தால் சீக்கிரம் வெந்து விடும். மேலும் வாயு தொந்தரவு இருக்காது.