தேவையானவை:
- உளுத்தம்பருப்பு ஒரு கப்,
- துவரம்பருப்பு அரை கப்,
- சின்ன வெங்காயம் ஒரு கப்,
- பச்சை மிளகாய் 5,
- இஞ்சி ஒரு துண்டு,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் தேவையான அளவு,
- தேங்காய் (பல்லு பல்லாகக் கீறியது) கால் கப்.
தாளிக்க: மிளகு ஒரு 10. டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், முந்திரி
செய்முறை: உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். துவரம்பருப்பை கரகரப்பாக அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை பொங்க பொங்க அரையுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி, மாவில் சேருங்கள். அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெயில் மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து வறுத்து மாவில் சேருங்கள். நன்கு கலந்து, சிறு போண்டாக்களாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.