தேவையானவை:
- பாகற்காய் கால் கிலோ,
- உப்பு ருசிக்கேற்ப, தூள் செய்த வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்.
மசாலாவுக்கு:
- தேங்காய் துருவல் கால் மூடி,
- வர மிளகாய் 2,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் 5 அல்லது 6,
- புளி 1 சுளை.
செய்முறை: பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி வேகவிடவும். மசாலாவுக்கான சாமான்களைக் கரகரவென அரைத்துக்கொள்ளவும். காய் வெந்ததும் திட்டமாக உப்புப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி நீரை வடித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, காயைப் போட்டுப் பிரட்டவும். காய் கொஞ்சம் வதங்கியதும் அரைத்த மசாலாவைப் போட்டு நன்கு வதக்கவும். இறக்கும் முன்னர் வெல்லத் தூளைத் தூவி இறக்கவும்.