தேவையானவை:
- பச்சரிசி மாவு (பதப்படுத்தும் முறை கீழே தரப்பட்டுள்ளது) 2 கப்,
- பொட்டுக்கடலைப் பொடி அரை கப்,
- பாசிப்பருப்பு மாவு (வறுத்து, அரைத்தது) கால் கப்,
- சர்க்கரை தூள் ஒரு கப்,
- வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு ஒரு சிட்டிகை,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சுகளில் வைத்து, எண்ணெயைக் காயவைத்து, பிழிந்து வேகவைத்தெடுங்கள். விருப்பப்பட்டால் கைமுறுக்காகவும் சுற்றலாம். தீயை ஒரே சீராக எரியவிடவேண்டும். இல்லையெனில் (சர்க்கரை சேர்ந்திருப்பதால்) முறுக்கு கருகி விடும்.
குறிப்பு: பச்சரிசியை கழுவி, நிழலில் உலர்த்தி, லேசான ஈரம் இருக்கும்போது மிஷினில் அரைத்து, பிறகு சலித்து, ஒரு தட்டில் நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.