தேவையானவை:
- பச்சரிசி அரை கப்,
- உளுத்தம்பருப்பு அரை கப்,
- உப்பு ஒரு சிட்டிகை,
- எண்ணெய் தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பருப்பு ஒரு கப், தேங்காய் துருவல் அரை கப், சர்க்கரை ஒரு கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக ஊறவைத்து நன்கு அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வையுங்கள். சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சேர்ந்தாற்போல் வந்ததும் ஏலக்காய்தூள், நெய் சேர்த்து கிளறுங்கள். இந்தப் பூரணத்தை ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.
பிறகு ஒவ்வொன்றாக எடுத்து, அரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். செட்டி நாட்டின் ஸ்பெஷல் இனிப்பு இந்த சீயம்.