தேவையானவை:
- பாசிப்பருப்பு 1 கப்,
- பச்சரிசி கால் கப்,
- தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 3,
- சின்ன வெங்காயம் 10,
- பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் பெருபெருவென ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், வெங்காயம் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பிவிட்டு எடுக்கவும்