தேவையானவை:
- பாதாம் பருப்பு ஒரு கப்,
- சர்க்கரை ஒரு கப்,
- லிக்விட் க்ளூகோஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஒரு டீஸ்பூன்,
- பால் அரை கப், ஃபுட் கலர் (ஏதாவது இரு நிறங்கள்) சில துளிகள்.
செய்முறை: பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, தோல் உரித்து கழுவிக்கொள்ளுங்கள். பால் சேர்த்து அதை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். லிக்விட் க்ளூகோஸையும் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கிளறுங்கள். அதைச் சேர்த்ததும் கலவையை சிறிது எடுத்து உருட்டி பார்த்தால் உருட்ட வரும். அப்போது கீழே இறக்கி, இரண்டு பகுதிகளாக பிரித்து, இரு வேறு கலர்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இரண்டு கலர் கலவையையும் தனித்தனியே பெரிய சப்பாத்தி களாகத் திரட்டுங்கள். ஒரு கலர் சப்பாத்தி மேல் மற் றொரு கலர் சப்பாத்தியை வைத்து, அப்படியே பாய் போல சுருட்டுங்கள். பிறகு, விரல் நீளத் துண்டு களாக நறுக்குங்கள். குறிப்பு: லிக்விட் க்ளூ கோஸ் சேர்க்காமலும் செய்யலாம். ஆனால், கலவை உருட்டும் பதம் வரும்போது கவனமாக இறக்கிவிடவேண்டும்.