தேவையானவை: வெண்டைக்காய் & கால் கிலோ, கடலைமாவு & அரை கப், மிளகாய்தூள் & ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் அல்லது அரிசிமாவு & 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & சுவைக்கேற்ப, மிளகாய்தூள் & 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெண்டைக்காயை காம்பு நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். அத்துடன் கடலைமாவு, கார்ன்ஃப்ளார் (அல்லது அரிசி மாவு), மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசறி, 10 நிமிடம் வைக்கவும். பிறகு, எண்ணெயைக் காயவைத்து, வெண்டைக்காய்களைப் போட்டு, கரகரவென்று பொரித்து எடுக்க வேண்டும். சில நிமிடங்களில் தயாரிக்கக் கூடிய, வித்தியாசமான சுவை தரும் டிபன், இந்த குர்குரே.