தேவையானவை:
- பிரெட் ஸ்லைஸ் 2,
- கடலை மாவு முக்கால் கப்,
- இஞ்சி 1 துண்டு,
- பச்சை மிளகாய் 3,
- பூண்டு 4 பல்,
- பெரிய வெங்காயம் 1,
- கறிவேப்பிலை சிறிது,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பிரெட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். கடலை மாவில் போட்டு, உப்பையும் சேர்த்து பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவில் சிறிது தண்ணீர் தெளித்து அழுத்திப் பிசைந்து, சிறு பக்கோடாக்களாக உதிர்த்துவிடுங்கள். நன்கு வேக விட்டெடுங்கள்.