...

புதினா, மல்லி பக்கோடா

தேவையானவை:

  • புதினா  1 கட்டு,
  • மல்லித்தழை  1 சிறிய கட்டு,
  • கடலை மாவு  1 கப்,
  • இஞ்சி  1 துண்டு,
  • பச்சை மிளகாய்  3,
  • சோம்பு  1 டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.