தேவையானாவை:
- சாதம் 2 கப்,
- புளி எலுமிச்சம்பழ அளவு,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 5,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- வேர்க்கடலை (விருப்பப்பட்டால்) ஒரு டேபிள்ஸ்பூன்,
- நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, சாதம் சேர்த்துக் கலந்து அழுத்திவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் சாதத்தில் சூடாகக் கொட்டி (அப்போதுதான் புளியின் பச்சை வாசனை போகும்) கிளறுங்கள். விருப்பப்பட்டவர்கள், ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலையை, வேர்க்கடலைக்குப் பதிலாக சேர்க்கலாம். முதல்நாள் செய்து மீந்த சாதத்தில் புளியைக் கரைத்து ஊற்றிவைத்திருந்துவிட்டு கூட, மறுநாள் இம்முறையில் தாளிக்கலாம். அருமையாக இருக்கும்