தேவையானவை: புழுங்கல் அரிசி & ஒரு கப், நிலக்கடலை & கால் கப், ஓமப்பொடி (அல்லது) காராபூந்தி & கால் கப், கறிவேப்பிலை & சிறிதளவு, உப்பு & சுவைக்கேற்ப.
செய்முறை: புழுங்கல் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கடாயில் போட்டு, பொரியும் வரை வறுத்து எடுக்க வேண்டும். நிலக்கடலையை தனியே வறுத்து எடுக்க வேண்டும் (இவை இரண்டுக்குமே எண்ணெய் தேவையில்லை). பிறகு, ஓமப்பொடியோ அல்லது காராபூந்தியோ சேர்த்து, கறிவேப்பிலையை வறுத்துச் சேர்த்து, கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மழைகாலத்துக்கு ஏற்ற ஒரு திடீர் ஸ்நாக். விரைவாக தயாரிக்கலாம். ‘கரகர’வென ருசியாக இருக்கும்.