தேவையானவை:
- பச்சரிசி ஒரு கப்,
- சின்ன வெங்காயம் 10,
- பூண்டு 8 பல்,
- உப்பு தேவையான அளவு,
- கறிவேப்பிலை சிறிதளவு.
வறுத்து பொடிக்க:
- காய்ந்த மிளகாய் 6,
- மிளகு அரை டீஸ்பூன்.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். மிளகாய், மிளகு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இது நன்கு வதங்கியதும், மிளகாய், மிளகு தூளை தூவி நன்கு கிளறுங்கள். பிறகு கறிவேப்பிலை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.