தேவையானவை: தக்காளி (பெரியது) – 3, உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 3 டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், தூள் உப்பு – தேவைக்கேற்ப.
வெளிமாவு தயாரிப்பதற்கு: மைதா மாவு – முக்கால் கப், பச்சரிசி மாவு – கால் கப், தூள் உப்பு – தேவைக்கேற்ப, மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – இரண்டரை கப்.
செய்முறை: தக்காளியைக் கழுவி காம்புப் பகுதியை மெல்லிய தகடாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் தக்காளியின் உள்பகுதியில் உள்ள விதை + நீரை ஸ்பூன் அல்லது கத்தி கொண்டு எடுத்து விடவும். கடலை மாவு + அரிசி மாவு + உப்பு + மிளகாய்தூள் + தண்ணீர் சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்து உப்பு + மிளகாய்தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் பிசைந்த கிழங்கையும் மல்லித்தழையையும் சேர்த்து சூடு வரக் கிளறி இறக்கி ஆற விடவும். பின்னர் உருளைக்கிழங்கு மசாலாவை தக்காளியில் நிரப்பவும். நறுக்கி எடுத்த காம்புப் பகுதியில், கரைத்த மாவை தொட்டுத் தடவி ஒட்டி மூடிவிடவும். பின் முழுத்தக்காளியையும் கரைத்த மாவில் அமிழ்த்தி எடுத்து, வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் பொரித்தெடுக்கவும். இந்த மூடிதக்காளி கட்லெட்டுக்கு தக்காளி சாஸ், சுவையான ஜோடி.