மங்களூர் போண்டா

தேவையானவை:

  • மைதா மாவு  1 கப்,
  • சற்று புளித்த தயிர்  அரை கப்,
  • ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை,
  • பெருங்காயம்  அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிது,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். அதில் கடுகைப் பொரித்து கொட்டுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.