...

மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் & ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரைடீஸ்பூன், எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் மிளகாய்தூள், கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய் எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் & நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம் மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி. கோக்கி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, மல்லித்தழை & சிறிதளவு, உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சாதாரணமான சப்பாத்திகளாக தேய்த்து, வேகவைத்தெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.