தேவையானவை:
- மசூர் பருப்பு அரை கப்,
- உருளைக்கிழங்கு 2,
- கார்ன்ஃப்ளார் கால் கப்,
- எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்,
- மல்லித்தழை சிறிதளவு,
- கரம்மசாலாதூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், பச்சை மிளகாய் 3, முந்திரிப்பருப்பு 6.
செய்முறை: பருப்பை மலர வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளுங்கள். அத்துடன் வேகவைத்த பருப்பு, கார்ன்ஃப்ளார், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை, கரம்மசாலாதூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசையுங்கள். பிசைந்த கலவையிலிருந்து சிறிது எடுத்து, சிறு ரோல்களாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித் தெடுங்கள்.