தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, பூண்டு – 5 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப்பால் (முதலில் எடுக்கும் கெட்டிப் பால்) – ஒன்றரை கப், இரண்டாம் முறை எடுக்கும் தேங்காய்ப்பால் – 2 கப்.
செய்முறை: வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கிக்கொள்ளுங்கள். இரண்டாம் தேங்காய்ப்பாலை அடுப்பில் வைத்து அதில் வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கை விடாமல் கிளறி வேகவிடுங்கள். வெங்காயம் வெந்ததும் இறக்கி, முதல் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை சேருங்கள்.ஆப்பத்துக்கும் இடியாப்பத்துக்கும் அருமையான சைட்-டிஷ்.