தேவையானவை:
- மீல்மேக்கர் 200 கிராம்,
- பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் 4,
- மல்லித்தழை சிறிதளவு,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்,
- உப்பு,
- எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க:
- பச்சை மிளகாய் 3,
- இஞ்சி ஒரு துண்டு,
- பூண்டு 5 பல்,
- பட்டை ஒரு துண்டு,
- லவங்கம் 2,
- முந்திரிப்பருப்பு 4,
- சோம்பு அரை டீஸ்பூன்.
செய்முறை: மீல்மேக்கரை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டி, மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு, நன்கு அலசி, அலசிப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். பொட்டுக்கடலையைப் பொடிசெய்யுங்கள். வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்குங்கள். மீதி பச்சை மிளாயுடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நைஸாக, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். மீல்மேக்கர் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். மிகவும் ருசியான அயிட்டம் இது